ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது இடது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆந்திராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இடையே மும்முனை போட்டி கடுமையாக உள்ளது. அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி. விஜயவாடாவில் நேற்று நமது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டிருந்தார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் வாகனத்தில் இருந்தவாறு பொதுமக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்துக்கு சற்று மேலாக கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இநத தாக்குதலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.
கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours