இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் கேசங் பங்கரேப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெறுவது இதுவே முதல் முறை.மேலும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் முக்கியத் தலைவர்கள் புதுதில்லிக்கு வருகை தருகின்றனர்.அந்த வகையில்,ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளிக்கிழமை இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில அமைச்சர் சாந்தனு தாக்கூர் வரவேற்றார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் கேசங் பங்கரேப் ஒரு இந்தோனேசிய தொழில்முனைவோர் மற்றும் யூடியூபர் ஆவார்.
இதனை தொடர்ந்து உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் கேசங் பங்கரேப் மற்றும் அவரது மனைவி எரினா குடோனோ ஆகியோர் பார்வையிட்டனர்.மேலும் தாஜ்மஹால் முன் புகைப்படம் எடுத்தனர்.இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது கிழக்கு-ஆசியா உச்சி மாநாடு மற்றும் 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதன் விளைவாக விடோடோவின் இந்திய வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours