கொச்சியில் நடைபெறும் மெகா ரோடு ஷோவில் (சாலைப் பேரணி) பிரதமர் நரேந்திரமோடி இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா செல்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ம் தேதி லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் கேரளா மாநிலம், திருச்சூர் சென்ற அவர் அங்கு பாஜக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இரண்டு வாரங்களில் பிரதமர் மோடி, இன்று மீண்டும் கேரளா வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக கொச்சிக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறும் மெகா ரோடு ஷோவில் (சாலைப் பேரணி) பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து குருவாயூரில் நடைபெறும் நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளார். இதைத் தொடர்ந்து கொச்சிக்கு திரும்பும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இதில் கட்சியின் சுமார் 6 ஆயிரம் சக்தி கேந்திரா பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மத்திய அரசு திட்டங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவற்றை முடித்து விட்டு அன்று மாலையில் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கேரளா செல்வது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours