17வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, ஓட்டு எண்ணும் நாள், எத்தனைகட்டங்களாக தேர்தல் போன்றவை பற்றிய அறிவிப்பு மார்ச் 12ம் தேதி வெளியாகும், ஏப்ரல் 19ம் தேதி தேர்தல்நடக்கும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என வெளியான தகவல் போலியானது. இதுவரைதேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் பத்திரிகைகளை அழைத்து தேதி அறிவிக்கப்படும் எனஇந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் இடமாற்றம்
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மற்றுமொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‛‛3 ஆண்டுகளுக்கு மேல்ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் விதிகளின்படி ஆணையஇடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்ட அதிகாரிகள் தொகுதிக்குள் பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்”. இவ்வாறு மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours