வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயா்த்தியது எஸ்பிஐ !

Spread the love

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.

அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours