தெண்டுல்கரை நெருங்கும் கோலி..!

Spread the love

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 99 ரன்னை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 34 வயதான விராட்கோலி இதுவரை 278 ஒருநாள் போட்டியில் விளையாடி 47 சதம், 65 அரைசதத்துடன் 13,024 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 13 ஆயிரம் ரன்களை மின்னல்வேகத்தில் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் தனதாக்கினார். இதற்கு முன்பு இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் தனது 330-வது ஆட்டத்தில் 13 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து இருந்தார். ஆனால் கோலி 278 ஆட்டங்களிலேயே அந்த மைல்கல்லை அடைந்து தெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிவிட்டார். ஒரு நாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் விவரம் வருமாறு:-

தெண்டுல்கர் (இந்தியா) – 18,426 ரன் (463 ஆட்டம்)

சங்கக்கரா (இலங்கை) – 14,234 ரன் (404)

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13,704 ரன் (375)

ஜெயசூர்யா (இலங்கை) – 13,430 ரன் (445)

விராட் கோலி (இந்தியா) – 13,024 ரன் (278)

தெண்டுல்கரை நெருங்கும் கோலி

  • பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 122 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு அது 47-வது சதமாக பதிவானது. ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவரான இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் 2 சதம் தான் தேவையாகும். இந்த ஆண்டுக்குள் இச்சாதனையை தகர்த்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் கோலி தொடர்ச்சியாக நொறுக்கிய 4-வது சதம் இதுவாகும். ஏற்கனவே இங்கு கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சதம் ( 128 ரன், 131 ரன் மற்றும் 110 ரன்) அடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்து இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லாவின் (செஞ்சூரியனில் 4 சதம்) சாதனையை சமன் செய்தார்.
  • கோலி- ராகுல் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரு ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் முகமது ஹபீசும், நசிர் ஜாம்ஷெட்டும் முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours