கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை தூக்கி சென்றது. இதன் காரணமாக சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அமைத்த கூண்டுகளில் 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்நிலையில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.
இதையடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours