புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடனேயே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழலில் இண்டியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) அணியின் தலைவர் சரத் பவாரும் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருப் பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இண்டியா கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:
பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவிவழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம். இதேபோல ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் உறுதி அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+ There are no comments
Add yours