திமுக பேசுவதற்கு சோனியா, ராகுல்காந்தியே காரணம்.! ஜே.பி.நட்டா விமர்சனம்.!

Spread the love

கடந்த வாரம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகையில், டெங்கு, கொரோனா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் ஆதாரவு அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன.

அதேபோல அமைச்சர் உதயநிதி கருத்திருக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் ஆதரவும் தெரிவித்து வந்தனர். கர்நாடகா அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனுமான பிரியங்க் கார்கே இது குறித்து பேசுகையில், சக மனிதனை மனிதனாக மதிக்காத , அனைவருக்கும் சம உரிமை அளிக்காத எந்த மதமும் நோயைப் போன்றது தான். அதனால் தான் நினைக்கும் கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது என்று பேசுயுள்ளார். மேலும், அரசியல் அமைப்புதான் எனது மதம். அதனை நான் பின்பற்றுகிறேன் என்றும் பிரியங்க் கார்கே பேசி இருந்தார்.

சனாதனம் பற்றிய இத்தகைய கருத்துக்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா தனது எதிர்ப்புகளை தெரிவித்து அவரது X சமூகவலைதள (ட்விட்டர்) பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அதில், I.N.D.I.A கூட்டணியின் மும்பை ஆலோசனை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசுகிறார்.

பின்னர் காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே சனாதனத்தை பற்றி எதிர்ப்புகளை தெரிவிக்கிறார். இதன் மூலம் சனாதன தர்மத்திற்கு எதிராக I.N.D.I.A கூட்டணி உருவானது என்பது தெரிகிறது. இந்த சனாதன எதிர்ப்பானது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரால் திட்டமிடப்பட்ட செயலாகும்.

எந்த மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா? I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்களுக்கு அரசியலமைப்பின் விதிகள் பற்றி தெரியாதா? சனாதனம் குறித்து காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். I.N.D.I.A கூட்டணியும், காங்கிரஸும், சோனியாவும், ராகுலும் சனாதன தர்மத்தின் மீது வெறுப்பு அரசியலை மேற்கொள்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours