இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது…. மகாராஷ்டிரா அமைச்சர் !

Spread the love

நாசிக் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் வெங்காயம் ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லாசல்கான் சந்தை உட்பட நாசிக் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் வெங்காயம் ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மராட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் தடா பூஸ் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது,”10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சில்லறை விலையை விட 10 அல்லது 20 ரூபாய் அதிக விலையில் விற்பனையாகும் பொருட்களை வாங்க முடியும். வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது.

சில சமயங்களில் வெங்காயம் குவிண்டாலுக்கு 200 ரூபாயாக இருக்கும். சில சமயங்களில் 2,000 ரூபாயாகவும் அதிகரிக்கும். இதுபோன்ற நிலைமையில் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். வெங்காய ஏற்றுமதி வரி விதிக்கும் முடிவு சரியான ஒருங்கிணைப்புடன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours