உலக அளவில் பார்வையிழப்பு பாதிப்புகளை அதிகம் எதிர்நோக்கியிருக்கும் நாடு இந்தியா !

Spread the love

உலக அளவில் பார்வையிழப்பு பாதிப்புகளை அதிகம் எதிர்நோக்கியிருக்கும் நாடு இந்தியாதான் என்று மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தேசிய கண் தான விழிப்புணா்வு வாரங்கள் (15 நாள்கள்) வெள்ளிக்கிழமையுடன் (செப்.8) நிறைவடைந்த நிலையில், இதுதொடா்பாக சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது:

உலக அளவில் பார்வையிழப்பு பாதிப்புகளை அதிகம் எதிர்நோக்கியிருக்கும் நாடு இந்தியாதான். நம்மில் பெரும்பாலானோர் கண்புரையால் பாதிக்கப்படுவது அதற்கு முதல் காரணம். அடுத்ததாக விழிவெண்படல பாதிப்புகளுக்கு உள்ளாவதும் பிரதான காரணமாக உள்ளது.

கண்புரை பாதிப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அதேவேளையில், விழி வெண் படல (கார்னியா) பிரச்னைகளுக்கு தீா்வு காண கண் தானம் அவசியமாகிறது. இதற்கு முன்பு வரை, ஒரு விழி வெண் படல தானத்தின் மூலம் ஒருவருக்கு மட்டுமே பார்வை அளிக்க முடியும். இப்போது உள்ள மருத்துவ மேம்பாட்டின் காரணமாக ஒரு கண் தானத்தின் வாயிலாக ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பார்வையை மீட்டெடுக்க இயலும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் போ் விழி வெண்படல பார்வைக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனா். அதற்குத் தீா்வு காணும் நோக்கில் நாடு முழுவதும் சுமார் 250 கண் வங்கிகள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது 45,000 கண்கள் தானமாகக் கிடைக்கப் பெறுகின்றன.

அண்மைக் காலமாக கண் தானம் குறித்த விழிப்புணா்வு ஓரளவு மேம்பட்டிருந்தாலும், அதன் தேவை இன்னமும் குறையவில்லை என்றார் அவா்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours