தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் இவர் சில பெரிய பட்ஜெட் படங்களில் கேமியோவாகவும் வருகிறார் .
இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில் சமந்தா எங்கே என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
நீண்ட நாட்களாக மயோசிட்டிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா ‘குஷி’ படத்திற்கு பின் சில காலம் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகி விட்டாரா என்றும் பல கேள்விகள் அரண் போல் எழுந்து நின்றன .
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா அவரது பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் . அதில் தன்னுடைய வெகேஷனை வெளிநாட்டில் என்ஜாய் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அழகிய நகரமான நியூ யார்க் நகருக்கு சென்றுள்ள நடிகை சமந்தா அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில் தனியாக பொழுதை போக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
+ There are no comments
Add yours