மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலை குறைப்பை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு, கொரோனா காலத்தில் தான் பண உதவி செய்திருக்க வேண்டும். அப்போ செய்யாமல் இப்போது செய்வது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
+ There are no comments
Add yours