ஜெயிலர் பட ரிலீஸிற்கு முன்பு ஒரு வார ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், ராஜ் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து உள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்டார். ரஜினிகாந்தின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்தது.
இமயமலை பயணத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த், சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுவிட்டார். அங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ரஜினியுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இதுகுறித்து, “என்னுடைய நெருங்கிய நண்பர், இந்தியாவின் தலைசிறந்த நடிகர், சிறந்த மனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று ராஜ்பவனில் சந்தித்தேன். ஜார்க்கண்ட்டிற்கு அவரை மனதார வரவேற்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.
+ There are no comments
Add yours