27 வார கருவை கலைக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் !

Spread the love

குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் 27 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயது இளம்பெண், தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆகஸ்ட் 19 உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கருக் கலைப்பு வழக்குகளில் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட என உத்தரவிட்டிருந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, பெண்ணிற்கு உரிய சிகிச்சைகள் செய்து கருக்கலைப்பு செய்ய முடியுமா, இயலாதா என்பது குறித்து அதன் அறிக்கையை ஆகஸ்ட் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கருக்கலைப்பு செய்யலாம் என அதற்கான பரிந்துரையை மருத்துவர் குழு எழுத்துபூர்வமாக உச்சநீதிமன்றத்தில் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமையால் குஜராத் பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால் அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய சிகிச்சை வழிமுறைகளோடு கருக்கலைப்பு செய்ய மருத்துவமனைக்கு செல்ல நீதிபதி நாகரத்தினா தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த விஷயத்தில், உயர் நீதிமன்றம் மிகவும் மெத்தனமாக நடந்துள்ளது என குஜராத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றத்தில் கண்டித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours