கட்டணம் கேட்ட டோல்கேட்டை புல்டோசரால் தகர்த்த ஓட்டுநர்.. வீடியோ வைரல் !

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரில் சுங்க கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஆபரேட்டர் சுங்கச்சாவடியை தகர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள சாஜர்சி டோல் பிளாசாவில் புல்டோசர் ஒன்று கடந்து செல்ல முற்பட்டுள்ளது. அப்போது சுங்கச் சாவடி ஊழியர்கள், சுங்கக் கட்டணம் செலுத்துமாறு அதன் ஆபரேட்டரிடம் (ஓட்டுநர்) தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஆபரேட்டர், திடீரென புல்டோசர் மூலம் சுங்கச் சாவடியை தகர்க்க தொடங்கினார். அவரது முரட்டுத்தனமானச் செயலால் இரண்டு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவங்களை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய புல்டோசர் ஆபரேட்டரை தேடி வருகின்றனர்.

கடந்த வாரம், இதே சுங்கச் சாவடியில் கார் ஓட்டுநர் ஒருவர், சுங்க கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் மீது காரை விட்டு மோதினார்.

இந்த கொடூர சம்பவம் சிஜார்சி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த டோல் பிளாசாவில் சுங்கக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில், வாகன ஓட்டுநர்கள் அடுத்தடுத்து அசம்பாவிதத்தில் ஈடுபடுவது சுங்கச்சாவடி ஊழியர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours