கேரளாவில் ஆடிகாரில் மாஸாக வந்து இறங்கி விற்பனை செய்யும் சந்தையில் காய்கறிகளை விற்கும் விவசாயி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெரிய பெரிய பணக்காரர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் தான் விலை உயர்ந்த ஆடி கார் வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சந்தையில் காய்கறிகளை விற்கும் விவசாயி ஒருவர் ஆடிகாரில் மாஸாக இறங்கி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த சுஜித் எனக்கிற இளம் விவசாயி ஒருவர் சாலையோர சந்தையில் காய்கறிகளை விற்க ஆடி ஏ4 சொகுசு காரில் வந்து இறங்குகிறார். முன்னதாக, சுஜித் தனது ஆடி காரை சந்தைக்கு ஓட்டிச் செல்லும் போது, வயலில் பயிர்களை பறித்துக் கொண்டு அவற்றை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிச் சென்று சந்தையில் வைத்து விற்பனை செய்கிறார். பின்னர், அவற்றை விற்றுவிட்டு மீண்டும் தனது ஆடம்பரமான காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார்.
இதுகுறித்து கூறிய சுஜித், இந்த ஆடி காரை செகண்ட் ஹாண்டில் வாங்கியதாகவும், இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது வேண்டும் கூறியுள்ளார்.
மேலும், இது அதிகபட்சமாக 320 Nm மற்றும் 204 குதிரைத்திறன் கொண்டது என்றும், பவர்டிரெய்ன் 7-ஸ்பீடு TC கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இது ஆடி A4 7.1 வினாடிகளுக்குள் 100 கிமீ/மணிக்கு வேகமடைகிறது என்றும் கூறியுள்ளார்.
புதிய ஆடி கார் ரூ.44 லட்சம் முதல் ரூ.52 லட்சம் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours