2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, பாஜகவும், காங்கிரஸும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக ஆரம்பித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியானது திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா (I.N.D.I.A) என கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டமானது பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டங்களில் தான் இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) பெரும் பெயரும் வைக்கப்பட்டது அதேபோல ஒவ்வொரு பிரதான கட்சியில் இருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பாளர் குழுவையும் கடந்த முறை மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி அறிவித்தது.
இதனை தொடர்ந்து நேற்று முதன்முறையாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. மொத்தம் 14 பேர் இந்த ஒருங்கிணைப்பாளர் குழுவில் உள்ள நிலையில் நேற்று 12 பேர் பங்கேற்று உள்ளனர்
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு செல்ல வேண்டிய காரணத்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்காத காரணத்தால் அவர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர் மத்தியில் விரைவில் தொகுதிகளை தீர்மானம் பணியை தொடங்குவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது விரைவில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல் முதலில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பொதுக்கூட்ட நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
போபாலை தொடர்ந்து சென்னை, பாட்னா, நாக்பூர், டெல்லி, கவுகாத்தி உள்ள உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்தியா கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் முடிந்தவுடன் டெல்லியில் நடைபெறும் என கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பாக பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours