மனைவி வீட்டு வேலைகளையும் குடும்ப பொறுப்புகளையும் செய்ய வேண்டும் என கணவர் நினைப்பது கொடுமை என கூற முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் ஒருவரின் விவாகரத்து வழக்கை விசாரித்தபோது இந்த விளக்கத்தை கூறியுள்ளது. தனது மனைவி தன்னை கொடுமை படுத்துவதாகவும் தன்னுடன் சேர்ந்து இருப்பதில்லை என்றும் விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுரேஷ் குமார் கைத் மற்றும் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் விசாரித்திருந்தார்கள். இது குறித்து பேசிய நீதிபதிகள், திருமணமான பெண், வீட்டுவேலை செய்வது பணியாட்கள் செய்வதற்கு ஈடாகாது. திருமணமான பெண்கள் வீட்டுவேலை செய்வது குடும்பத்தின் மீதான அவர்களது அன்பு மற்றும் அக்கறைதான் என கூறி இருக்கிறது.
மேலும் திருமணம் என்பது கணவன் மனைவி என இருவரும் இணைந்து பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது. மனைவி வீட்டு வேலை செய்யவேண்டும் என கணவர் எதிர்பார்ப்பது கொடுமை எனக் கூற முடியாது எனவும் நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள்.
சில சூழல்களில் கணவர்கள் நிதி சார்ந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். அதைப்போல மனைவி வீட்டு வேலைகளை நிர்வாகிப்பார்கள். அப்படியான சூழலில் மனைவி வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பது கொடுமை எனக் கூறமுடியாது என நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவாகரத்து மனுவை விசாரத்தபோது, கணவர் தொடுத்திருந்த வழக்கில், மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாகவும், தன்னை தனது பெற்றோர் வீட்டில் இருந்த பிரித்து தனியாக இருக்க வைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தனியாக வந்தபோதிலும், மனைவி அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருக்கிறார். பெற்றோரிடம் இருந்து கணவரை பிரித்தது கொடுமை என குற்றம் சாட்டியிருந்தார்கள் நீதிபதிகள்.
மிக குறைவான வருமானம் அல்லது வருமானமற்ற வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள மகனுக்கு சட்டப்பூர்வமான கடமை இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது விரும்பத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
+ There are no comments
Add yours