தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகே பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்பேன் !

Spread the love

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்பேன் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு, 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீடு குறித்து இனி காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், சமாஜ்வாதி தரப்பில் அக்கட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸுக்காக அமேதி, ரேபரேலியில் போட்டியிடுவதை சமாஜ்வாதி கட்சி தவிர்த்தது.

இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு 15 இடங்களை மட்டுமே வழங்க, சமாஜ்வாதி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று அமேதி வழியாக செல்கிறது. அதைத் தொடர்ந்து ரேபரேலிக்குள் நுழைய உள்ளது. அங்கு ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவும் யாத்திரையில் இணைய உள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகே ராகுல் காந்தியின் யாத்திரையில் இணையப் போவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அகிலேஷ் யாதவ் கூறுகையில், “தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிடமிருந்து பட்டியல்கள் வந்துள்ளன. நாங்களும் அவர்களிடம் பட்டியலை வழங்கியுள்ளோம். தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸின் நியாய யாத்திரையில் இணையும்” என்றார்.

இந்தியா கூட்டணியில் ஏற்கெனவே கட்சிகள் விலகியதாலும், காங்கிரஸ் தலைவர்கள் பாஜக முகாமுக்கு தாவி வருவதாலும் ஏற்கெனவே பெரும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது அகிலேஷ் யாதவும் நெருக்கடி கொடுத்துள்ளதால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours