பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என கடந்த வாரம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய நிலையில், டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திமுக ஊழல் கட்சி. அது தமிழகத்தில் இருந்து திமுக விரைவில் காணாமல் போகும் என பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை. திமுகவை ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்” என பேசினார்.
அமைச்சர் அன்பரசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours