தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை நவ.17-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நவ.30-ம் தேதி நடைபெறுகிறது. பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ் கட்சிக்கு இடையே போட்டி வலுவாக உள்ளது. இந்த நிலையில், தெலங்கானா தேர்தலை முன்னிட்டு நவ.17-ம் தேதி ஹைதராபாத் சோமாஜிகுடாவில் அமைந்துள்ள கட்சி ஊடக மையத்தில் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.
மேலும், நவ.17-ம் தேதி நல்கொண்டா, வாரங்கல், கட்வால் மற்றும் ராஜேந்திரநகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளிலும் அமித் ஷா உரையாற்றுகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன், சோமாஜிகுடாவில் அமைந்துள்ள கட்சி ஊடக மையத்தில் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுகிறார்.
முன்னதாக நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (பி.சி) தலைவர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அமித் ஷா அறிவித்தார். அக்டோபர் 27 அன்று சூர்யாபேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தெலங்கானாவுக்கு நவ.25 முதல் 27 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. நவ.25-ம் தேதி கரீம்நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மறுநாள் நிர்மலில் நடைபெறும் மற்றொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours