உயிருக்கு ஆபத்து… இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும்.!

Spread the love

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு , அவர் ஆட்சி செய்த காலத்தில், செயல்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 370 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு விதிக்கப்பட்டு வருகிறது. அதே போல, தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தான், ஊழல் தடுப்பு நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளியில் இருக்கும் எனது குடும்பத்திற்கும், சிறையில் இருக்கும் எனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால், சிறையில் இருக்கும் எனக்கும் , எனது குடும்பத்திற்கும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடிதம் வாயிலாக நீதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours