கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் புதிதாக 7 இந்திய மொழிகள் உட்பட 110 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் அடங்கும்.
+ There are no comments
Add yours