ஏழுமலையான் கோவிலில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Spread the love

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 945 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 35 ஆயிரத்து 844 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.உண்டியல் காணிக்கையாக ரூ.3.67 கோடி வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours