அயோத்தி ராமர் கோயிலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

Spread the love

அயோத்தி ராமர் கோயிலில் நாளை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், கோயிலின் புதிய புகைப்படங்களை ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் ராமர் சிலை பிரான பிரதிஷ்டை விழா நாளை நடைபெற உள்ளது. விழாவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், இக்கோயிலை கட்டியுள்ள ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயிலின் புதிய புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய புகைப்படங்களில் அலங்கரிக்கப்பட்ட கோயிலின் உட்புறம் விளக்குகளில் ஒளிர்கின்றன. மேலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அழகோவியமாக மிளிர்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

முன்னதாக, புதிய ராம் லல்லா சிலையின் முதல் புகைப்படம் கடந்த 18ம் தேதி இரவு சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கு கோயிலின் தலைமை அர்ச்சகர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

பிரான பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் நாடு முழுவதுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் முக்கிய விருந்தினர்கள் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க உள்ளனர். லட்சுமிகாந்த் தீட்சிதர் தலைமையிலான பூசாரிகள் குழுவினர் கோயிலில் முக்கிய பூஜை, சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours