சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நிறைவடைவதை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.
மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறை.
தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. தங்க அங்கி அணிந்து தீப ஒளியும் ஜொலிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு அத்தாழ பூஜை நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.
இந்தாண்டும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பேருந்தில் பம்பை வரை செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7, 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
+ There are no comments
Add yours