அஷ்டம சனி பாதிப்பா… விடுபட இதப் படியுங்க !

Spread the love

அஷ்டம சனி பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்கள்;-

🟥 மாதந்தோறும் சிவ ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்

🟥 காலையில் தினமும் குளித்து விட்டு காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்

🟥 வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

🟥 சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து வரவும்
சனிக்கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்கி வழிபடவும்

🟥 சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை கண்டிப்பாக சாப்பிடவே கூடாது

🟥 சனிக்கிழமைகளில் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதலை குறைக்கும்

🟥 தினந்தோறும் விநாயக பெருமானை வழிபாடு, மற்றும் அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்

🟥 ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரையும், தேய்பிறை அஷ;டமி நாட்களில் கால பைரவரையும் வணங்கி வரவும்

🟥 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கும், கால்களால் நடக்க இயலாதவர்களுக்கும் மற்றும் அன்னதானத்துக்கும் உதவி செய்யலாம்

🟥 சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்

🟥 வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கி வருதல் மற்றும், ராம நாமத்தை தினமும் ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்

இந்த நியதிகளை முறையாக கடைப்பிடித்து, சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours