கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பொறுப்புக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது மேல்சாந்திகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையே புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு 25 பேரும், மாளிகைப்புரத்திற்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் கேரள மாவட்டம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் நம்பூதிரி, சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்ப்பட்டார். இவர் கார்த்திகை 1 முதல் பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
+ There are no comments
Add yours