கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையின் மீது ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். கடந்த ஆண்டில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்யத் தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கனகசபை மீது தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்குத் தடை இல்லாததால் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours