ஐதராபாத் அணிக்கு 166 ரன் இலக்கு !

Spread the love

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரவீந்திரா 12 ரன்களிலும், கெய்க்வாட் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த துபே – ரஹானே இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

இவர்களில் அதிரடியாக விளையாடிய துபே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரஹானேவும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜடேஜா தனது பங்குக்கு 31 ரன்கள் அடிக்க, மறுமுனையில் டேரில் மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி 1 ரன் அடித்தார். இதன் மூலம் சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக துபே 45 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது, உடன்கட், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஐதராபாத் பேட்டிங்பேட்டிங் செய்து வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours