3 வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி !

Spread the love

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. அதனைத் தற்போது 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது, அது 2-3 நாட்களில் முடிவதை விரும்புவதில்லை. அதேசமயம் 5 நாட்களுக்கு மேல் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இப்போட்டியில் இங்கிலாந்து அணியினர் சிறப்பாகவே விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் எங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில், அமைதியாக எதைப்பற்றியும், நாங்கள் யோசிக்காமல் இருந்தோம். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த காரணத்தினால்தான், ஜடேஜாவை முன்கூட்டியே ஆட வைத்தோம். மேலும், அச்சயமத்தில் வலது – இடது பேட்டர்கள் களத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் எண்ணியே அதனைச் செய்தோம். அது எங்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமைந்தது. மேலும், சர்ஃப்ரஸ் கான் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரால் என்ன செய்ய முடியும் என்பதை இப்போட்டியின் மூலம் உலககிற்கு காட்டியுள்ளார்.

மேலும் இந்தியாவில் டாஸ் வெல்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போட்டியில் எங்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இல்லாத சமயத்திலும், மற்ற பந்துவீச்சாளர் தங்களது சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்தியதை மறந்துவிடக்கூடாது. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி மெற்றும் சர்ஃப்ராஸ் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பந்துவீச்சாளர்களின் வேலையையும் பாதியாக குறைத்துவிட்டனர்.

அதற்கேற்றது போல் இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி அசத்தினார். மேலும் விசாகபட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போதே ஜெஸ்ய்வாலை பற்றி நான் அதிகம் பேசிவிட்டேன். அதனால் அவரைப்பற்று அதிகம் பேச நான் விரும்பவில்லை. ஏனெனில் அவர் தனது கெரியரை மிக வலிமையாக தொடங்கியுள்ளதுடன், அதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours