மகளிர் கிரிக்கெட்- மூன்றாவது டி 20 யில் இந்தியா வெற்றி.

Spread the love

மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்க மகளிர் அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பான ஆடினர். ஸ்மிர்தி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னும், ஷபாலி 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இறுதியில், இந்திய மகளிர் அணி 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours