National

2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்- நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

புதுடெல்லி: சர்வதேச சவால்களையும் மீறி, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் [more…]

National

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன் !

0 comments

பிப்ரவரி 1 ஆம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய உள்ளார். உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவைஇடங்களுக்கு லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய உள்ளார். ஜனவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல்மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட் நிதியாண்டின் ஆரம்ப மாதங்களில் தேர்தலுக்கு பிறகு புதிய அரசாங்கம் அமையும் வரைஉள்ள நடவடிக்கைகளுக்காக அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.மேலும் 2022-2023 நிதியாண்டு மார்ச் 31 ஆம்தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கு பிந்தைய அரசாங்கம் மே அல்லது ஜீன் மாதத்தில் பதவியேற்க உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்திற்கான நிதி மேம்பாட்டை தக்கவைத்துக்கொள்ள இடைக்கால பட்ஜெட்டில்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்ததொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கப்படும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப் பெரிய அறிவுப்புகள் இதில்இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.