பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருவதை முன்னிட்டு, கோயிலை சுற்றியுள்ள கடைகள்சனிக்கிழமை பிற்பகல் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான ’கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. நாளைசென்னையில் தொடங்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், பிரதமா்நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா்பங்கேற்கவுள்ளனா். சென்னை வரும் பிரதமா் மோடிக்கு தமிழக அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பிரதமரின் வருகையைமுன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 22,000 காவலர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்குபிரதமர் மோடி திருச்சி செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று முதல் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் காவல் துறையின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கோயிலை சுற்றியுள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகள்நடத்துவோரின் விவரங்கள் போலீஸார் கேட்டு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் பிரதமர்பயணிக்கும் சாலைகள், கோயிலை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் பாதுகாப்பு காரணமாக இன்று மாலை முதல்சனிக்கிழமை பிற்பகல் வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம் சுற்றிலும் உள்ள கடைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள கடைகள்அடைக்கப்பட்டு வருகிறது. மேலும், கடை உரிமையாளர்கள் கடைகள் இன்று முதல் விடுமுறை என்ற அறிவிப்பினைகடைகளில் ஒட்டி, அடைத்து வருகின்றனர். காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். வெளியூரில் இருந்து ஸ்ரீரங்கம் வரும் வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டுவருகிறது. வரும் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர்மோடி முக்கியமான வைணவ தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது