சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வரை சந்திக்க உள்ளேன் – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Spread the love

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுகியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாமக சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பது தொடர்பாக கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வக்கீல் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசிய பாரா விளையாட்டு: சாதனை படைத்த இந்தியா! பிரதமர் மோடி பெருமிதம்!

அப்போது பேசிய, பாமக நிறுவனர் ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். இடஒதுக்கீடு என்பது ஒவ்வொரு மக்களின் சமூக நிலை, கல்வி நிலை மற்றும் மக்கள் தொகையை வழங்குவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலை நிறுத்த முடியும். சமூகநீதியே எங்கள் உயிர்மூச்சு என கூறும் திமுக இதை பற்றி மூச்சுக்கூட விடவில்லை. எனவே, தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஏற்கனவே கலைஞர் அவர்களை சந்தித்தேன்.

தற்போது, முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். அனைத்து சமுதாய மக்களின் நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்கள் சமூகநீதி குறித்து பேசுவது ஏன்?. மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அனைத்து சாதியினரின் சமுதாய நிலையை அறிய முடியும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம். சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு சாதிக்காக மட்டும் கேட்கவில்லை, தமிழக வளர்ச்சிக்காகவே கேட்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என திமுக சொல்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. சாதி என்றால் கெட்ட வார்த்தை அல்ல, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அரசியல் பிரச்சனை வரும் என்று சொல்லலாம், ஆனால், கணக்கெடுப்பு நடத்தவிட்டாலும் அரசியல் பிரச்சனை வரும் என கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours