கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
மதுரை உயநீதிமன்ற கிளை, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
இதனையடுத்து, மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிபிஐ-ன் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வலக்கை விசாரித்த நீதிபதி சண்முகையா, குற்றபத்திரிக்கையில் ஒரு காவல் ஆய்வாளர் மட்டும் குற்றவாளி என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே இது நிராகரிக்கத்தக்கது. மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து 6 மாதத்திற்கு புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours