தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி 4 மாவட்டங்களில் இன்று முதல்வர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கு காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நான்கு மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார். முதல்வர் தலைமையில் இன்று மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours