கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் கடந்த 2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேலோ இந்தியா நிகழ்வை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த விழாவுக்கு அழைப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டிருந்தேன். கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன் என்று பிரதமர் சொல்லி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்ட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு திருச்சி வந்த பிரதமரிடம் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை அவரிடம் நினைவுப்படுத்தினேன். கட்டாயம் செய்துத் தருவதாக கூறினார்.
+ There are no comments
Add yours