பேனா நினைவு சின்னம்… மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு !

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் ரூ. 81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மற்றும் ஒருதரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குளும் தொடர்ந்தன.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரிய மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. கடற்கரை ஒருங்காற்று மண்டல மேலாண்மை அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி வெண்ணிலா தாயுமானவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நினைவு சின்னம் தொடர்பாக ஜனவரி 31-ல் நடந்த கருத்து கேட்பு கூட்டம் விதிகளின்படி நடைபெறவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க ஜூன் 19ல் ஆணையம் அனுமதி தந்தது. இந்த நிலையில், எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தென்மண்டல தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours