தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்..ஐகோர்டு உத்தரவு !

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று காணப்பட்டது.

இந்தப் பொது வெளியில் பதிவான கோரிக்கையை 2013ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று (ஏப்.23,2024) நடைபெற்றது. அப்போது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளன? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என கேள்வியெழுப்பப்பட்டது.

Passengers can book and avail these special buses through the website https://www.tnstc.in.
பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்து, இது குறித்து தமிழ்நாடு உள் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மேலும், “இளைஞர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் அரசு, தனியார் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் எனவும் ஐகோர்ட் கேட்டுக்கொண்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours