மும்பை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் !

Spread the love

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை, இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை சென்றுள்ளார். மேலும், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours