தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அரசு ஊழியர்களுடன் அரசின் பல்வேறு திட்ட நிலைப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், அதன் பிறகு திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதாக நேற்று கிருஷ்ணகிரி வந்தார்.
நேற்று வந்தவுடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டி நாயக்கன்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த விடுதி வார்டன் தான் பதிந்து வைத்திருந்த கோப்பு விவரங்கள், உணவுப்பொருள் இருப்பு ஆகியவை ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
அப்போது பதிவேட்டில் உள்ள தகவலும், கையிருப்பு பொருட்களிலும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து வார்டானிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். அதற்கு வார்டன் முருகன் சரிவர பதில் கூறவில்லை.
இதனை தொடர்ந்து, கல்லூரி விடுதி வார்டன் முருகனை பனி இடைநீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது X சமூகவலைத்தளத்தில் பதிவிடுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி – சமையல் கியாஸ் உள்ளிட்ட சமையல் பொருட்களின் இருப்பை பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரியான அளவில் இருக்கின்றதா என்று ஆய்வு செய்தோம்.
மேலும், மாணவர்கள் & விடுதிப் பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை கேட்டறிந்தோம். உணவுக்கூடம் – தங்குமிடம் – குளியல் மற்றும் கழிப்பிட வசதிகளை ஆய்வு செய்த பின்னர், மாணவர்கள் தெரிவித்த நிறை குறைகளின் அடிப்படையில் அவற்றை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டோம்.என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours