தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பட்டியல் சமூக மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல. திமுகவில் அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கருணாநிதி வஞ்சிக்கிறார் என்று கூறி, திமுகவில் இருந்தே வெளியேறினார்.
மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கும் SCSP நிதியில், 10,466 கோடி செலவிடாமல் வீணடித்தது திமுக. இந்த ஆண்டு அந்த நிதியொல் 1,600 கோடியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றியுள்ளது. திமுகவின் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காகத்தான்.
தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களுக்கு திமுகதான் காரணம். இன்றைய சபாநாயகர் அப்பாவுவே, ஜாதியை வளர்த்து, ஜாதிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கியதே கருணாநிதிதான் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளுக்கு திமுக தான் காரணம்.
நாங்குநேரி மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வைத்திருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாட்டிலுள்ள பின் தங்கிய பகுதிகளை முன்னேற்ற அறிவித்திருக்கும் Aspirational Blocks திட்டத்தில் நாங்குநேரியும் தேர்வாகியுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, உட்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் நாங்குநேரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் .
தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை எப்படி ஊழல் செய்வது என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலின் மொத்த வடிவமான, மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து அரசியல் செய்யும் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் என அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
+ There are no comments
Add yours