இன்று திமுக முப்பெரும் விழா.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்..

Spread the love

வேலூரில் இன்று திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவை தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்த பிறகும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துள்ளன. அந்த பகுதியில் திமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வந்தார். அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.

இன்று காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு திமுக கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த விழா காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். அது போல் வேலூரில் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் முதல்வர் வருகையையொட்டி 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு எந்தெந்த விருதுகள் யார் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பெரியார் விருது – மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கட்கும் அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கட்கும் கலைஞர் விருது – ஐ.பெரியசாமி அவர்கட்கும் பாவேந்தர் விருது -தென்காசி மலிகா கதிரவன் அவர்கட்கும் பேராசிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours