திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாகத்தை கொளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 2 நகராட்சிகளில் உள்ள 1552 மையங்களில் பயிலும் 87,842 மாணவ,மாணவியர்கள் பயன்பெறுவார்கள், இத்திட்டத்திற்காக 4605 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் அரசு துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
+ There are no comments
Add yours