நாவை அடக்காவிட்டால் செல்வப்பெருந்தகையின் பின்புலங்களை ஆராய வேண்டி வரும்.. எச் ராஜா எச்சரிக்கை !

Spread the love

கொள்கைப்பிடிப்பு இல்லாத செல்வப்பெருந்தகை பாஜக பற்றி பேச அருகதை இல்லை. பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டி வரும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக தேசிய மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா, காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு இன்று வருகை புரிந்தார். அவர், சங்கர மட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து இருபது நிமிடம் தனிமையில் இருவரும் சந்தித்து உரையாடினர்.

இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு மூலம் வேலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று தேச துரோக பணி செய்தவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை அமைக்க உள்ளது.

எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்ததால் தான் திமுக வெற்றி பெற்றதே தவிர, கடந்த முறையை விட இந்த முறை திமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது. அனைத்து மதங்களுக்கும் அனைத்து மேம்பாடும் நடைபெற்று கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் மதப் பிரிவினையை உண்டாக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதிகள் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டு பெரும்பான்மையானவர்களை புறந்தள்ளியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு திமுகவினர் ஆடுகளை வெட்டிய நபர்கள் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது என்றும், பாமகவின் வாக்குகளே அதன் வாக்கு சதவீதம் உயர்வுக்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரஸில் உள்ளார். பாஜக பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும். ஆகவே வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours