செஸ் தொடரில் தங்கம் வெல்லாதது வருத்தம் தான். ஆனால் வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி என செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற செஸ் வீரர் பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய செஸ்வீரர் பிரக்ஞானந்தா விமான நிலையத்திலிருந்து நேரடியாக சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர் பேட்டியளித்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, சென்னை விமான நிலையத்தில் எனக்கு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. செஸ் விளையாட்டு வளர்கிறது என்பது தெரிகிறது. கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதும் மகிழ்ச்சி. கேண்டிடேட்ஸ் போட்டியில் சவால்கள் அதிகமாக இருக்கும்.
மேக்னஸ் கார்ல்சன் உடன் செஸ் குறித்து கலந்துரையாடினேன். சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்க இருப்பதால் அதற்கான பயிற்சியை எடுக்க உள்ளேன். உலகக்கோப்பை செஸ் தொடரில் தங்கம் வெல்லாதது வருத்தம் தான். ஆனால் வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி. புதிதாக செஸ் விளையாட்டுக்கு வருபவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சந்தோஷமாக செஸ் விளையாட்டினாலே போதும் என்றார்.
+ There are no comments
Add yours