வெளிவந்த ஜிகர்தண்டா 2 அப்டேட் !

Spread the love

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் “ஜிகர்தண்டா”. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தநிலையில் இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா தட்டிச்சென்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் . இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஜிகர்தண்டா -2’ திரைப்படத்தின் டீசர் வருகிற 11-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours