பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

Spread the love

மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசிய வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கார்கி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்.

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர். கமல்ஹாசனின் நண்பராக அறியப்படும் இவர் கமலுடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours